முத்துப்பேட்டை அருகே காரை நிறுத்தியதில் தகராறு: ஒருவர் கைது



முத்துப்பேட்டை அருகே காரை நிறுத்தியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை அடுத்த ஆள்காட்டு வெளி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (40). இவர் சம்பவத்தன்று எடையூர் ஆலமரத்தடியில் உள்ள ஒர்க்க்ஷாப்பில் தனது காரை பஞ்சர் ஒட்டுவதற்காக நிறுத்தி வைத்திருந்தார். இதற்கு அதே பகுதியை சேர்ந்த உலக ராஜேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனோகரனை உலக ராஜேந்திரன் தாக்கினார். படுகாயமடைந்த மனோகரன், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிந்து உலக ராஜேந்திரனை கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.