முத்துப்பேட்டை அருகே மேற்கு வங்க மாநில வாலிபர் மர்மசாவு: போலீசார் விசாரணை
முத்துப்பேட்டை அருகே மேற்கு வங்க மாநில வாலிபர் மர்மசாவு: போலீசார் விசாரணை

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கீழ வாடியக்காடு கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதில் வட மாநிலத்தை சேர்ந்த 14 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அனைவரும் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மேலும் சில இளைஞர்கள் வேலைக்கு வந்தனர். இதில் மேற்குவங்காளம் உச்சர்புகாரி தாலுக்கா, ஜமால்தாகா பகுதியை சேர்ந்த காக்கன் ராய்தாக்குவா மகன் சுபாங்கர் ராய் தாக்குவா (வயது 18) என்பவர் உடன் வேலைக்கு வந்தார். ஆனால் எந்தவித வேலையும் பார்க்காமல் செல்போனில் பேசியவரே இருந்துள்ளார். இதில் கடந்த 2 நாட்களாக செல்போனில் அஞ்சனா என்ற பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த சுபாங்கர்ராய் தாக்குவாவை திடீரென காணவில்லையாம். உடன் தங்கி இருந்தவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை மீண்டும் தேடியபோது கட்டுமான பணிகள் நடைபெறும் பள்ளி அருகே உள்ள மரத்தில், காதில் ஹெட்போன் மாட்டியபடி சுபாங்கர்ராய் தாக்குவா பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து சுபாங்கர் ராய்தாக்குவா தற்கொலை செய்துக் கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.