பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம்- படங்கள் இணைப்புமுன்னால் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று (27.07.2016) புதன் கிழமை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, அதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் பள்ளி தாளாளர் உயர்திரு.அ.முகம்மது யாகூப் MA,B,sc,BT.,அவர்கள் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்கள்.பள்ளியின் இளைய தாளாளர்.மு.அமானுல்லா,B.I.T அவர்களும் பள்ளி முதல்வர் மற்றும் துணைமுதல்வர், மற்றும் ஆசிரியர்,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் புகழை போற்றும் வகையில் பேச்சு போட்டி,கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு பேசினர்.இறுதியில் பள்ளி முதல்வர் நன்றியுரையாற்றினார்.


தகவல் & போட்டோஸ்:  பிரிலியண்ட் நபில்
Share on Google Plus

1 comments:

  1. Bro sinna thritham...ninaivu thina anusarippu kondattam kedaiyathu...thiruthipodunga bro..

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.