முறுக்கு மீசையுடன் மாணவர்கள் பள்ளிக்கு வர தடை!




மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது. பிறந்த நாளானாலும் பள்ளி சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஆன்டிராய்ட், ஆப்பிள் ரக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.

இதனால் பள்ளிகளில் ஒழுக்கம், கீழ்படிதல் போன்றவை காணாமல் போகிறது. குறிப்பாக, ஒருதலைக்காதல், மது அருந்தும் வழக்கம், ரோமியோ போன்று செயல்படுவது போன்ற தேவையற்ற பழக்கங்கள் உருவாகிறது. இதனால், ஆசிரியர்-மாணவ சமுதாயத்துக்கு இடையில் ஆரோக்யமான சூழல் இல்லை. எனவே, அதை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி கல்வித் துறை சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து பிளக்ஸ் பேனர்கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
சுற்றறிக்கை விவரம்
* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும்.

* லோ ஹிப், டைட் பிட் பேன்ட்கள் அணிந்து வர அனுமதி இல்லை.

* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது

* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘’டக் இன்’’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.

* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்ட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.

* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.

* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.

* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.

* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.

-Dinakaran.com
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.