முத்துப்பேட்டையில் கணினி மையங்களில் போலீஸ் அராஜக திடீர் சோதனை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பறிமுதல்முத்துப்பேட்டையில் கணினி மையங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கபாலி உட்பட புதுப்பட வி.சி.டி மற்றும் பாடல்கள் பதிவிறக்கம் செய்யப்படுவதாக திருட்டு வி.சி.டி தடுப்புபிரிவு  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமை காவலர் குமார் மற்றும் போலீசார் நேற்று முத்துப்பேட்டையில் உள்ள கணினி மையங்கள் மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

பங்களாவாசல் அருகே கடை ஒன்றில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், போலிசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல் பல்வேறு கடைகளில் போலீசாருக்கும், கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சில கடைகளில் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்து சோதனைக்கு எடுத்து சென்றனர்.  இதில் உரிய அனுமதியின்றி பாடல்கள் பதிவிறக்கம் செய்ததாக 2 பேரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

Thanks To : Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.