மனைவி, குழந்தைக்காக பிச்சை எடுத்தாவது ஜீவனாம்சம் வழங்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவுமனைவி, குழந்தைகளின் சாப்பாட்டுக்காக பிச்சை எடுத்தாவது ஜீவனாம்சம் வழங்குவதில் தவறு கிடையாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த ரெங்கசுபத்ராவுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் தங்குவதற்கு வீடு, ஜீவனாம்சம், இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி ரெங்கசுபத்ரா கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும், சீர்வரிசை பொருட்களை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து செல்வராஜன், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் ஜீவனாம்சமும், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.