மாணவிகளின் தற்காப்பு பயிற்சியை தீவிரவாத பயிற்சி என்று செய்தி வெளியிட்ட அஸ்ஸாம் நாளிதழ்
2014 ஆம் ஆண்டு ஹைதராபாத் பள்ளி மாணவிகள் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீயட்நாமிய தற்காப்புக்கலையான வோவினம் கலையை செய்து காட்டினர். இந்த தற்காப்பு பயிற்சி செயல்முறையில் 10 வயதில் இருந்து 16 வயது மதிக்கத் தக்க மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். ஆனால் இவர்களின் இந்த புகைப்படத்தை அஸ்ஸாம் மாநில நாளிதழான அசொமியா ப்ரடிடின் வெளியிட்டு அதனை தீவிரவாத பயிற்சி என்று செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஜூலை 11 ஆம் தேதி வெளியான இந்த நாளிதளின் முதல் பக்கத்தில் இந்த செய்து வெளியானதை கண்டு அதிர்ச்சியுற்ற வழக்கறிஞர் அமன் வதூத் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தேசிய பெண்கள் தினத்தை ஒட்டி ஹைதராபாத் மாணவிகள் தற்காப்பு பயிற்சி மேற்கொள்கின்றனர். அஸ்ஸாம் பத்திரிக்கை அதனை தீவிரவாத பயிற்சி என்று சித்தரித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த பெண்கள் தங்களது தற்காப்பு கலைகளை செய்து காட்டும் செய்தி பிரஸ் டிவி தொலைகாட்சியில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் வேலையில் இது போன்ற செய்திகள் மேலும் பல வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது.

நன்றி விடியல் வெள்ளி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.