முத்துப்பேட்டை அருகே கட்டி முடிக்கப்பட்ட பேரிடர் மைய கட்டிடத்தை திருவாரூர் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு!முத்துப்பேட்டை ஜீலை-26 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கல்லடிக்கொல்லை கிராமத்தில் 2014-2015-ம் ஆண்டு சி.டி.ஆர்.ஆர்.பி திட்டத்தின் கீழ் 3.52 கோடி செலவில் பல்நோக்கு பேரிடர் மைய கட்டப்பட்டது. தற்பொழுது கட்டிடப்பணி நிறைவுப்பெற்றது இதனையடுத்து நேற்று திருவாரூர் கலெக்டர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கட்டிட பொறியாளர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார.; அப்போது மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரபி, வட்டாட்சியர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலரும் உடன் இருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.