அர்னாப் கோஸ்வாமியால் வெட்கப்படுகிறேன்.. அவர் ஒரு பத்திரிகையாளரா? பர்க்கா தத் ஆவேசம்அர்னாப் கோஸ்வாமி சார்ந்துள்ள துறையை சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுகிறேன் என்று மற்றொரு மூத்த பத்திரிகையாளரான பர்க்கா தத் காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
டைம்ஸ் நவ் செய்தி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி. என்டிடிவியின் கன்சல்டன்ட் ஆசிரியர் பர்க்கா தத்.
ஆங்கில காட்சி ஊடகத்தை சேர்ந்த இவ்விரு முக்கிய பத்திரிகையாளர்கள் நடுவேயான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் அர்னாப் என்ற காவி வெறியன் காஷ்மீரில் நடைபெற்ற கலவரத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் சப்போர்ட் செய்து வருகிறார்கள். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள், தேச விரோதிகள் என்று அர்னாப் குறிப்பிட்டார்.

சமீபத்தில் காஷ்மீரில் கலவரம் பாதித்த பகுதிகளை பர்க்கா தத் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அங்கிருந்தபடி, இந்திய ராணுவத்தின் கலவர அடக்குமுறைக்கு எதிராக கட்டுரைகளை எழுதினார். பாதிக்கப்பட்ட மக்கள் போட்டோக்களை வெளியிட்டார். எனவே, தேச விரோதி என்று தன்னை அர்னாப் குறிப்பிட்டதாக பர்க்கா தத் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று காட்டமாக பேஸ்புக்கில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் பர்க்கா தத். இவர் ஒரு பத்திரிகையாளரா? இவர் சார்ந்துள்ள துறையை நானும் சேர்ந்துள்ளேன் என்று கூற வெட்கப்படுகிறேன். அர்னாப் மோடியின் கையாள்.. இப்படி நீள்கிறது பர்க்கா தத் பேஸ்புக் பதிவு.

காஷ்மீரில் நடப்பது இனப்படுகொலை அதை வேடிக்கைப் பார்க்கும் ஊடகங்களே விபச்சார ஊடகங்கள்...

அர்னாப் போன்ற காவி தீவிரவாதிகளின் முயற்சியால்தான் முஸ்லிம்கள் தீவிரவாதியாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற உண்மை இதன்மூலம் வெளிவந்துள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.