பா.ஜ.க மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல்
விழுப்புரத்தில் பா.ஜ.க மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.
விழுப்புரத்தில் தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று  நடைப்பெற இருந்தது.

இதில், பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், பொறுப்புகள் போடுவதில் குளறுபடிகள் நடப்பதாக கூறி மாவட்ட செயலாளர் சேகர் தனது ஆதரவாளர்களுடன் வந்து மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள், இருக்கைகள், மேசைகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகின்றது.

அப்போது அதனை தடுக்க வந்த மற்றொரு தரப்பினருக்கும், சேகர் ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
50க்கும் மேற்பட்ட நாற்காலிகள் மற்றும் டியூப் லைட்டுகள் உடைக்கப்பட்டன.

அதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 15 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.