உலகின் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்கள் ! [ படங்கள் ]சர்வதேச அளவில் விமான பயணிகளுக்கு தரமிக்க சேவைகளை வழங்குவதில் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நேற்று செவ்வாய் கிழமை அன்று ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன. சுமார் 104 நாடுகளை சேர்ந்த 19.2 மில்லியன் பயணிகளிடம் சிறந்த சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தரமிக்க உணவுகள், செளகரியமான இருக்கைகள் மற்றும் பயணிகளிடம் விமான குழுவினர் நடந்துக்கொள்ளும் விதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 2001, 2002 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்த ( 2016 ) ஆண்டும் நான்காவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த விமான சேவைகளின் முதல் 10 இடங்களை பிடித்துள்ள விமான நிறுவனங்களின் பட்டியல்:


1. Emirates
2. Qatar Airways


3. Singapore Airlines


4. Cathay Pacific Airways

5. ANA All Nippon Airways
6. Etihad Airways
7. Turkish Airlines

8. EVA Air


9. Qantas Airways


10. Lufthansa
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.