பேய் பயத்தில் நடுங்கும் கிராம மக்கள்
கனமழையில் மரம் ஒன்று சாய்ந்ததை காரணம் காட்டி, இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் பேய் பயத்தில் மூழ்கி கிடக்கிறது ஒரு கிராமம். அந்த கிராமத்தின் நிலை குறித்த செய்தி தொகுப்பு.
ிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ளது புதுப்பட்டு கிராமம். இங்கு 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரம் ஒன்று சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால்  சாய்ந்துவிட்டது.

அந்த மரத்தை அகற்றச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்களிடையே பேய் பீதி பரவியுள்ளது.  மக்கள்  இரவு முழுக்க தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு தவித்து வருகின்றனர்.

கடந்த அமாவாசை தினத்தன்று புதுப்பட்டு அருகே உள்ள நம்பம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் குழந்தை ஒன்று எரிக்கப்பட்டதாகவும், பிள்ளி சூனியமே இதற்கெல்லாம் காரணம் எனவும் தெரிவிக்கின்றனர் புதுப்பட்டு கிராமத்தினர்.

இது ஒருபுறம் இருக்க, திருவண்ணாமலை மாவட்டம் பெருங்குளத்தூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி அமராவதிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய மாந்திரீகர் ஒருவர், பூஜை செய்ய வேண்டும் என கூறி ஆறுமுகத்திடம் 10 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பின்னர் ஆறுமுகத்தின் மனைவியை தனி அறையில் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அமராவதி காணாமல் போனதை கண்ட ஆறுமுகம், அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த மாந்திரீகவாதியை பிடித்த கிராம மக்கள், சரமாரியாக தாக்கி அமராவதியை மீட்டனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.