முத்துப்பேட்டையில் அரசு பள்ளிக்கு ஜமாத்தினர் பொருட்கள் வழங்கினர். - போட்டோ இணைப்புதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜிம்ஆ பள்ளிவாசல் வாட்சப் குரூப்ஸ் மற்றும் வெளிநாடில் வாழும் நண்பர்கள் சார்பில் ஆசாத்நகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் ஜின்னா தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவரும், பேரூராட்சி துணைத்தலைவருமான அப்துல் வகாப் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் அசோகன் வரவேற்று பேசினார். இதில் பள்ளிக்கு தேவையான நாற்காலி மற்றும் இதர பொருட்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா போன்ற பல்வேறு பொருட்கள் ஜமாஅத் நிர்வாகத்தினர் வழங்கினர். நுpகழ்ச்சியில் ஜமாஅத் செயலாளர் ரோஜாப்பு சுல்த்தான், நிர்வாகிகள் நிஜாம், ர{ஹப், சதாம்உசேன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
புடம் செய்தி
1,2.முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜிம்ஆ பள்ளிவாசல் வாட்சப் குரூப்ஸ் மற்றும் வெளிநாடில் வாழும் நண்பர்கள் சார்பில் ஆசாத்நகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜமாஅத் செயலாளர் ரோஜாப்பு சுல்த்தான் பேசினார்.
3.முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜிம்ஆ பள்ளிவாசல் வாட்சப் குரூப்ஸ் மற்றும் வெளிநாடில் வாழும் நண்பர்கள் சார்பில் ஆசாத்நகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நாற்காலி மற்றும் இதர பொருட்களை ஜமாஅத் நிர்வாகி நிஜாம் வழங்கினார.; .
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.