அதிரை பேரூராட்சி அலுவலகம் முன்பு சாக்கடை ஊற்றும் போராட்டம் !அதிராம்பட்டினம் 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது பழைய போஸ்ட்டாபீஸ் சாலை . இந்த சாலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூறி JCB இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை பேரூராட்ச்சி நிர்வாகம் அகற்றியது .

இதில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சிலமாதங்களாக சாலைகளின் இரு புறத்திலும் கழிவு நீர்கள் கரைபுரண்டு ஓடிக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பேரூர் மன்ற மநிர்வாகத்தை அணுகினர். ஆனால் இதுவறை அந்தச்சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீர் நின்றபாடில்லை. இதனால் அல் அமீன் ஜாமிஆ பள்ளிக்கு தொழுகைக்கு வரும் நபர்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாவதோடு அக்கம்பக்கத்தில் வசிக்கும் குடும்பத்தினர் நோயின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இதனை கருத்தில்கொண்டு வருகின்ற 26.07.2016 அன்று காலை 11 மணிக்கு அதிரை இஸ்லாமிக் வெல்ஃபர் அசோசியேசன் சார்பில் பேரூராட்சி மன்றம் எதிரே சாக்கடை ஊற்றும் போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் AIWA அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.