அதிரையில் அரசு போக்குவரத்து ஓட்டுனரின் மனிதநேயம்: தலைமை ஆசிரியர் பாராட்டு



தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தரன். மீனவர். இவரது மகன் மணிமாறன். திருச்சியில் கேட்டரிங் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சியிலிருந்து அரசு போக்குவரத்து பேருந்தில் தஞ்சை வந்த போது இவரது பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை பேருந்தில் தவறவிட்டுள்ளார்.

இதையடுத்து பேருந்து ஓட்டுனர் தமிழ்தாசன் என்பவர் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் சான்றிதழ்கள் இருந்தன. இதையடுத்து அதில் இருந்த பள்ளியின் முகவரியை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தப் பை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் மணிமாறன் தவறவிட்டது எனத் தெரியவந்தது.

இதையடுத்து, சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்களின் முன்னிலையில் மாணவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்தாசன் முடிவு செய்து,  அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று மாலை வந்தார்.

உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி  மாணவனின் தாய் தேவிகாவை பள்ளிக்கு அழைத்து பேருந்தில் தவறவிட்ட இவரது மகனின் சான்றிதழ்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தனது பணி நேரத்தை ஒதுக்கி சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நேரில் வந்து சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த அரசு போக்குவரத்து ஓட்டுனரின் நேர்மை, மனிதநேயத்தை தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் பெற்றோர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு சன்மானம் வழங்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.