முத்துப்பேட்டை டீக்கடையில் தீக்காயம் அடைந்தகணவன் மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி மரணம்முத்துப்பேட்டை–மன்னார்குடி சாலையில் கரிகாலன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராணி (வயது40). இவரது உறவினர் ராஜேந்திரன் (40) என்பவர் கடந்த ஜூன் மாதம் 21–ந்தேதி டீக்கடையில் வடை போட்டு கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக வடை சட்டியில் இருந்த எண்ணெய் தெரித்து அருகில் இருந்த மண்எண்ணெய் கேனில் பட்டு தீப்பிடித்தது. இதில் ராஜேந்திரன் மீது தீ பரவியது. அவரை காப்பாற்ற முயன்ற ராணி மீதும் தீப்பிடித்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் கடந்த 25–ந் தேதி பரிதாபமாக இறந்தார். ராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் ராணி நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.