முத்துப்பேட்டை அருகே முறைகேடாக நடக்கும் சாலை பணி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு புகார்முத்துப்பேட்டை அருகே முறைகேடாக நடக்கும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழநம்மங்குறிச்சியிலிருந்து மேலநம்மங்குறிச்சியை இணைக்கும் மண் சாலை, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது.

இதனால் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால்  நூதன போராட்டங்கள், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு போன்றவை செய்ததன் பலனாக சமீபத்தில் 2015- 2016 நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.75.40 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த பணி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதால் மீண்டும் பொதுமக்கள் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து பணி துவங்கப்பட்டது. ஆனால் முறைகேடாகவும், போதிய தரம் இல்லாமலும் ஆமை வேகத்தில் பணி நடப்பதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியை கலெக்டர் மதிவாணன் ஆய்வு செய்தார். ஆனாலும் பணியில் திருப்தியில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் பணியை ஒப்பந்தம் செய்தவர் அந்த பணியை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ஒப்பந்தக்காரரிடமும், மற்றொரு பகுதியை அதிமுக ஒன்றிய சேர்மன் நடராஜன் பினாமியாக கொண்ட ஒருவரும் செய்கின்றனர். இந்த பணி அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமல் நடப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன் புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் நான் ஏற்கனவே ஒரு மனு அனுப்பியிருந்தேன். இதைதொடர்ந்து தார்ச்சாலை பணியை கலெக்டர் பார்வையிட்டு சென்றார். தற்போது ஒருவர் பெயரில் உள்ள வேலையை இன்னொருவரும் செய்கிறார். பாதி வேலையை  கன்ஸ்ட்ரக்சன் மணி என்பவரும் மற்றொரு வேலையை முத்துப்பேட்டை சேர்மன் நடராஜனும் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம், மனித உரிமை கமிஷனைேயா நாடுவேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், இந்த பணியில் முறைகேடு நடக்காமல் இருக்க மீண்டும் முறையான ஆய்வை கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடத்த வேண்டும். தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.