மாட்டிறைச்சி அரசியலுக்கு விழுந்த மரண அடி: குஜராத்தில் கிளர்ந்தெழும் தலித்துகள் போராட்டம்!ஜுலை 11 அன்று மாட்டுத்தோலை உரித்ததாகக் கூறி நான்கு தலித் இளைஞர்களை “கோமாதா பாதுகாப்புக் குழு” என்று அழைக்கப்படும் இந்துத்துவ மதவெறி கும்பல் கொடுரமாகத் தாக்கும் வீடியோ சமுக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக 16 தலித் மக்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். இதைப் பார்த்து கொதிப்படைந்த தலித் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பல ஆண்டுகளாக உள்ளுக்குள்ளே குமுறிக்கோண்டிருந்த தலித் மக்களின் கோபம் எரிமலையென வெடித்துச் சிதறியது.
இறந்த மாடுகளை அப்புறப்படுத்தப் பணிக்கப் பட்ட தலித் மக்கள், அதைச் செய்வததற்காகவே இந்துத்துவ மதவெறிக் கும்பலால் தாக்கபடுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். இதைப் பதிய வைக்கும் விதமாக குஜராத்தின் பல நகரங்களில் போராட்டக்கரார்கள் இறந்த மாடுகளின் சடலங்களை அரசு அலுவலகங்களில் வீசி எரிந்தனர்.
“இனிமேல், இறந்த மாடுகளின் சடலங்களை நாங்கள் அப்புறப்படுத்த மாட்டோம். இந்துத்துவப் பக்தர்களும், கோமாதா பாதுகாப்பாளர்களும் இப்பணியைச் செய்யட்டும்.” என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
நேற்றைய போராட்டத்தில் போலீசுக்கும், போராட்டக்கரார்களுக்கும் நடந்த மோதலில் ஒரு தலைமைக் காவலர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், இருந்தாலும், போராட்டம், மேலும் நகரங்களுக்குப் பரவுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி குஜாத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
தலித் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்தைக் கண்டு நடுங்கிப் போன இந்துத்துவக் கும்பல் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்காக இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட கோமாதா பாதுகாப்பாளர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று உத்திரவாதம் வழங்குகிறது. இந்துத்துவக் கும்பலின் உண்மை முகத்தை நன்றாக அறிந்த தலித் மக்கள் அவர்களின் எந்த உத்திரவாதத்தையும் நம்பத் தயாரில்லை. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியாக இந்தப் போராட்டம் வலுத்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.