இரத்த அழுத்தம் (blood pressure) இருந்தா இத சாப்பிடாதீங்க...உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக ஒருவரைக் கொல்லும் ஓர் உடல்நல பிரச்சனை. தற்போது பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெறாவிட்டால், பின் அது தீவிரமாகி உயிரையே இழக்க வேண்டியிருக்கும்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் தீவிரமாவதற்கு உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்கள், மத்திய நரம்பு மண்டலம், பார்வை கோளாறு, பாலியல் பிரச்சனைகள் போன்றவற்றை உருவாக்கும். சரி, இப்போது உயர் இரத்த அழுத்தம் இருந்தால், எந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்று பார்ப்போம்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த உணவுகளில் சோடியம் அதிகமான அளவில் இருக்கும். ஆகவே டின்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்ப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

ஆல்கஹால் இரத்த நாளங்களின் சுவர்களைப் பாதித்து, இரத்த ஓட்டத்தைக் கடுமையாக்கும். இரத்த ஓட்டம் கடுமையாகும் போது இரத்த அழுத்தம் அதிகரித்து, அதனால் பேராபத்தை சந்திக்க நேரிடும்.

உப்பு என்பதே சோடியம் தான். சோடியத்தின் அளவு அதிகமாகும் போது, இரத்த அழுத்தம் உயர்ந்து, இதயம் மற்றும் இரத்த நாளங்கள் நேரடியாக பாதிக்கப்படும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் அதிகமாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், மாட்டிறைச்சியை உட்கொள்ளும் போது, அதில் உள்ள கொழுப்புக்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

உடல் பருமனுக்கு சர்க்கரையும் ஓர் காரணம். உடல் பருமன் இதயத்தில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைத் தீவிரமாக்கும். எனவே சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் கலோரிகள் குறைவாகவும், சோடியம் அதிகமாகவும் இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், ஊறுகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், நிலைமை மேன்மேலும் மோசமாகும்.

கடல் உணவுகளிலும் சோடியம் அதிகம் இருக்கும். அதிலும் இறாலில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருக்கும். அதே சமயம் சோடியத்தின் அளவும் ஏராளமாக இருக்கும். எனவே உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், இறாலை உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.