இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட Uber கார் ஓட்டுநர்
கொல்கத்தாவில், காரில் பயணம் செய்த பெண்ணிடம் uber கார் ஓட்டுநர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இரவு நேரத்தில், 27 வயது மதிக்கத்தக்க பெண் பெலியாகட்டா என்ற இடத்தில் இருந்து Uber கார் புக் செய்துள்ளார். பின்பு நண்பர் ஒருவரை சால்ட் லேக் ப்ளாக்கில் ஏற்றிக் கொண்டு பெலியாகட்டாவில் இறக்கி விட்டுள்ளார்.

அதன் பின், தன்னை மீண்டும் சால்ட் லேக் EC ப்ளாக்கில் இறக்கி விடுமாறு கார் ஓட்டுனரை அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இறக்கி விட வேண்டிய இடத்திற்கு செல்லாமல் யாரும் இல்லாத வேறு வழிக்கு காரை ஓட்டிச் சென்ற அந்த ஓட்டுனர், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்த அப்பெண்ணிடம், அவரை கடத்தி, வன்புணர்ச்சி செய்து விடுவதாக ஓட்டுனர் மிரட்டியுள்ளார்.

சூழ்நிலையை உணர்ந்த அப்பெண் காரில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து காவல்துறை மற்றும் Uber நிறுவனத்திடமும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.