துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர் (படங்கள் இணைப்பு)துபாயில் ஈமான் சார்பக நேற்று  (05.08.2016) நடந்த ரத்ததான முகாமில்100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ரத்த தானம் வழங்கினர்.

ஈமான் கல்ச்சுரல் சென்டர் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லாஹ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பளர்களாக இந்திய தூதரக அதிகாரி ராஜூ பால கிருஸ்ணன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அய்மான் சங்க செயலாளர் ஹமீது, சமூக நல ஆர்வலர் மீரான், 89.4 எப் எம் ஆர் ஜேக்கள் நிம்மி என்ற நிர்மல், பிராவோ, இசையமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 05/08/16 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது.
ரத்த தானம் துபை ஹெல்த் அத்தாரிட்டி குழுவினர் மிக சிறப்பான முறையில் ரத்ததானம் வழங்குவோரை பரிசோதித்து ரத்தத்தை பெற்றனர். துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்
ரத்ததானம் செய்தவர்கள் சான்றிதழ மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஈமான் கல்ச்சுரல் சென்டர் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லாஹ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பளர்களாக இந்திய தூதரக அதிகாரி ராஜூ பால கிருஸ்ணன் பங்கேற்றார்
.
நிகழ்ச்சியில் அய்மான் சங்க செயலாளர் ஹமீது, சமூக நல ஆர்வலர் மீரான், 89.4 எப் எம் ஆர் ஜேக்கள் நிம்மி என்ற நிர்மல், பிராவோ, இசையமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
ஈமான் செயலாளர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஈமான் குழுவினர் சிறப்பான முறையில் ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

ஊழியர்களுக்கு பாராட்டு ஈமான் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மிகவும் ஆர்வமுடன் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்ய வந்துள்ளமைக்கு துபை ஹெல்த் அத்தாரிட்டி ஊழியர்கள் பாராட்டு
தெரிவித்தனர்.

பள்ளி மாணவர் அசீல் ரத்ததானம் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். வு ரத்ததானம் சிறப்புற நடைபெற அஸ்கான் ஹவுஸ் அமானா புஹாரியா ஹோல்டிங்ஸ், அல் ரவாபி, பிளாக் துளிப் பிளவர்,அல் அமீன் ரெஸ்டாரன்ட், ஆம்பூர் கிச்சன், ரியாமி பிரிண்டிங், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆதரவை வழங்கின.
மீடியா ஆதரவை 89.4 எப் எம் வழங்கியிருந்ததுAdd caption

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.