ஶ்ரீரலங்கன் ஏர்லைன்ஸ் விமான எஞ்சினில் கோளாறு! 146 பயணிகள் உயிர் தப்பினர்!திருச்சியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சிக்கும், இலங்கை தலைநகர் கொழும்புக்கும் இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் 146 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானம் புறப்பட அனுமதியும் தரப்பட்டது. அப்போது, பைலட் விமானத்தின் அனைத்து பாகங்களையும் இயக்கி சோதித்து பார்த்தார். இதில், விமானத்தின் வால் பகுதியில் விமானத்தை மேலே எழும்பி பறக்க வைக்கும் கருவியான எலிவேட்டரில் பழுது ஏற்பட்டிருந்ததை கண்டு பிடித்தார்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, எலிவேட்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் இன்ஜினியர்கள் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் கொழும்பு சென்ற மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.