ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இனி இலவசமாக பேசலாம் பி.எஸ்.என்.எல்.அறிவிப்புஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அனைத்து பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் லேன் லைன் வாயிலாக இனி ஞாயிற்று கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என பி.எஸ்.என்.எல்.அறிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல். லேன் லைன் மூலம் இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் மாறுநாள் காலை 7 மணி வரை செய்யும் அனைத்து அழைப்புகளாக இலவச அழைப்புகளாக கணக்கிட்டு வருகிறது.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல்.வாடிக்கையாளர்கள் நலன் கருதி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திர தினத்தில் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதி வரை புதிய லேண் லைன் இணைப்புகள் பெறும் வாடிக்கையாளர்களிடம் நிர்மாணக் கட்டணம் வசூலிக்கபடமாட்டாது.

வெறும் 49 ரூபாய் மாத கட்டணத்தில் இதர வாடிக்கையாளர்களை போல இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இலவச அழைப்புகளாக இவர்களும் பெற முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.