C.B.I.க்கு மாற்றப்பட்ட திருச்சி பள்ளி மாணவி தவ்பீக் சுல்தானா மர்ம சாவு வழக்கு இன்று விசாரணை!
திருச்சியில் பள்ளி சிறுமி தவ்பீக் சுல்தானா ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி பலியான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 1,500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
திருச்சி காஜா மலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவரது மகள் தவ்பீக் சுல்தானா (13). மேலப்புதூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 2013 ஆகஸ்ட் 13ம் தேதி வழக்கம் போல் பள்ளி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவரது குடும் பத்தி னர் பாலக்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக் குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலை யில் 14ம் தேதி காலை திருச்சி ரெட் டை மலை ஆளில்லா ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் உடல் சித றிய நிலை யில் தவ் பீக் சுல்தானா இறந்து கிடந்தார். இதை ய டுத்து சம்பவ  இடம் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத் திற்குட் பட் டது என்பதால் எ புதூர் போலீசாரும் விசாரணை மேற்கொண் ட னர் பின் னர் சிபி சி ஐ டிக்கு வழக்கு மாற்றம் செய்யப் பட் டது. ஆனாலும் இவ்வ ழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலயில் தவ்பீக் சுல்தானா வின் தாய் மகபூப் நிஷா, மதுரை உயர் நீ தி மன்ற கிளை யில் கடந்த 2014ல் தாக்கல் செய்த மனுவில், தவ்பீக் சுல் தானா, கடந்த 13.8.2013ல் பள்ளிக்கு சென்றவர் மாலையில் வீடுதிரும் ப வில்லை. இது கு றித்து பாலக்கரை போலீசில் புகார் செய்தோம். பள்ளி யில் விசாரித்த போது தவ்பீக் சுல்தானா வீடுதிரும்பிய போது 2 நபர்களு டன் பேசிக் கொண் டி ருந் ததாக தெரிவித்தனர். மறு நாள் (14ம் தேதி) காலை சுல்தானா ரெட் டைமலை அருகே தண் ட வா ளத்தில் ஆடை கள் களைந்த நிலையில் சட லமாக கிடந் தார்.
எனது மகளை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தி ருக்கவேண் டும். அல்லது நரபலி கொடுத்திருக்கலாம் என கருதுகிறோம். போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோ தனை அறிக்கை யில் இரவு11 மணிக்கு இறந்திருக்கலாம் என கூறப் பட் டுள்ளது. எனவே அது வரை சுல்தானாவை கடத்தி வைத்திருந்தது யார் என்ற விவரங் களை அறிய போலீ சார் எந்த விசாரணை யும் நடத்த வில்லை. எனது மகள் படித்த பள்ளியிலும் விசாரணை நடத்தவில்லை. அவள் பேசிக் கொண் டிருந்த நபர்கள் யார் என்று கண் டுபிடித்து விசாரிக் கவில்லை. பின்னர் இந்த வழக்கு எடமலைப்பட்டி புதூர் போலீசுக்கு மாற் றப்பட் டது. அவர்களும் தற்கொலை என வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து டிஜி பி யிடம் புகார் செய்ததால் சிபி சி ஐ டிக்கு மாற்றி விசா ரித்த னர். அப்போதும் கொலை வழக்காக மாற்றவில்லை. எனவே சிபிஐ விசா ரித்தால் தான் உண்மை வெளிவரும் என்பதால் சிபிஐ விசாரிக்க உத்தர விட வேண் டும் என்று தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தவ்பீக் சுல்தானா வழக்கை சிபிஐ விசாரிக்க போது மான முகாந் திரங்கள் இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறி வழக்கை சிபி ஐக்கு மாற்றி உத்தரவிட் டார். இதையடுத்து 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி வந்த சிபிஐ அதிகாரிகள் மாண வி யின் உடல் கிடந்த ரெட் டை மலை ரயில் தண் ட வாளத்திற்கு சென்று விச ரணையை துவக்கினர். அதன் பின்னர் மாணவி யின் தாய் மகபூப் நிஷா, உறவினர்கள், தோழிகள் மற்றும் போலீசாரிடம் சிபிஐ அதிகாரி கள் விசாரணை நடத்தி சென்றனர். விசாரணை முடிவுற்ற நிலையில் ஜூலை மாதம் திருச்சி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன் றத்தில் சிபிஐ அதிகாரிகள் 1,500 பக்ககுற்றப் பத்திரிகை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வழக்கின் விசாரணை கடந்த 25ம் தேதி வந்தது. அப் போது தவ்பீக் சுல்தானா பெற்றோர் நீதி மன்றத்தில் ஆஜ ராகி தங்களுக்கு குற் றப் பத்திரிகை அறிக்கை வேண்டும் என மனு அளித் துள் ள னர். இந் நி லை யில் இன்று (22ம் தேதி) இந்த வழக் கின் விசாரணை வருகிறது. இதில் 1,500 பக்க குற்றப் பத்திரிகை நகல் பெற் றோ ரி டம் வழங்கப்படும் என எதிர் பார்க் கப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.