ஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச்சைக்காரர் கைது!ஷார்ஜாவில் பிச்சைக்காரர்கள் மற்றும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கும் எதிராக கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்டு வந்த 440 அதிரடி சோதனை நடவடிக்கைகளின் விளைவாக 9663 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 6850 பேர் ஆண்கள் 2813 பேர் பெண்கள்.

இவர்களில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு அரபி ஒருவர் அடிக்கடி அமீரகத்திற்குள் வந்து போவதை தொடர்ந்து சந்தேகப்பார்வையை இவர் மீது திருப்பிய அதிகாரிகளின் அதிரடி சோதனையில் சுமார் 1 மில்லியன் திர்ஹத்திற்கு மேல் அவருடைய இருப்பிடத்திலிருந்து கைப்பற்றினர், இவை அனைத்தும் பிச்சை எடுத்து சேர்த்தவை.

மேலும் சட்ட விரோதமாக தங்கியிருந்து கூட்டாக மாதம் 1.2 மில்லியன் திர்ஹத்திற்கு மேல் சம்பாதிக்கும் 20 ஆசிய நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுவாக இவர்கள் கைவிடப்பட்ட பழைய கட்டிடங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட தளங்கள், பிற தொழிலாளர்களின் தங்குமிடங்கள், ஒர்க் ஷாப் ஆகிய பணி இடங்களிலிருந்து பிடிபட்டவர்கள்.

இத்தகைய பிச்சைக்காரர்களும் சட்ட விரோத குடியேறிகளும் அமீரகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன் பலவகையான சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர் என்பதால் இவர்களை பற்றித் தகவல் தெரிந்தவர்கள் உடன் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் வரை தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.