பிகாரில் 20,000 ஜெலட்டின் குச்சிகள் கைபற்றப்பட்டுள்ளது!தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறை பிகாரில் மேற்கொண்ட சோதனையில் பெருமளவு வெடிபொருட்கள் சிக்கியது.

பிகார் ஜான்சியில்  தீவிரவாத தடுப்பினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 20,000 ஜெலட்டின் குச்சிகளும், 30,000 குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்களும் 600 கிலோ அமோனியா நைட்ரேட் எனும் வெடிபொருள் தயாரிக்கும் வேதியல் பொருளும் கைபற்றபட்டது.

இதில் பிகாரை சேர்ந்த ஐந்து நபர்களும் ஜான்சியை சேர்ந்த ஒருவரும் இதில் கைது செய்யபட்டனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. சரண் சிங் என்ற நபர்களிடம் இருந்து இந்த வெடிமருந்துகள் வாங்கபட்டது என்றும் இதனை இன்னொரு நபரிடம் கொடுக்க இருந்ததாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு பிகாரில் பெருநாள் அன்று பயங்கரமான வெடிபொருட்கள் கையகபடுத்தபட்டது.அதில் தொடர்புடைய நபர்களே இதிலிலும் தொடர்புடையதாக என்று சந்தேகப்படுகின்றனர் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

இந்த நபர்கள் ஏன் இவ்வளவு வெடிமருந்துகளை வைத்திருந்தனர்?, எங்கும் குண்டுவெடிப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனரா?, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருகிறதா? என்று விசாரணை நடைபெற்று கொண்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.