26 ஆண்டுகளுக்கு முன் 700 இந்தியர்களை காப்பாற்றிய நிஜ ஹீரோ !
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி 5000 டன் அரிசியுடன் குவைத் அல் சுவைக் துறைமுகத்திற்குள் நுழைந்த கார்கோ (சரக்கு) கப்பலின் கேப்டன் மற்றும் அவரது 25 கப்பல் பணியாளர்களுக்கோ தெரியாது, தாம் சத்தாம் ஹுசைனின் ஈராக்கிய படையிடம் வலியப்போய் சிறைபடப் போகிறோம் என்பது.

துப்பாக்கி முனையில் கையை தூக்கியவாறு சரணடைந்த கேப்டன் ஜெய்ன் ஆபிதீன் ஜீவாலே மற்றும் அவரது குழுவினர் சுமார் 35 நாட்கள் துறைமுகத்திலேயே சிறைபடுத்தப்பட்டனர்.

சரக்கு கப்பல் சமையல் கலைஞர்கள் மூலம் ஈராக் படையினருக்கும் பிற கைதிகளுக்கும் தனது கப்பலில் சமைத்துக் கொடுத்ததன் மூலம் ஈராக்கிய படையினருடன் சற்று சிநேகம் ஏற்படுத்திக் கொண்ட கேப்டன் ஜூவாலே அவர்கள் துறைமுகத்தில் கேட்பாரற்று இருந்த ஒரு டெலிபோன் அறையை பூட்டி சாவியை தன்னுடன் மறைத்து வைத்துக் கொண்டார், இரவு வேளைகளில் தினமும் ஈராக் படையினருக்கு தெரியாமல் மறைந்து சென்று அந்த டெலிபோன் அறையிலிருந்து குவைத் இந்திய தூதரகத்தை 1 வார தொடர் முயற்சிக்குப் பின் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

அன்றைய வெளியுறவு துறை மந்திரி ஐ.கே. குஜரால் அவர்களின் முயற்சியால் இந்திய தூதரக அதிகாரிகள் கேப்டனை சந்தித்து மீட்க வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பழகிய ஈராக்கிய படையிடம் தவிக்கும் இந்தியர்களையும் அழைத்துச் செல்ல வேண்டுகோள் விடுக்க அவர்களும் மனிதாபிமானத்துடன் சம்மதிக்க, 5000 டன் அரிசி இறக்கப்பட்டு அகதிகளை ஏற்றிச் செல்வதற்காக கப்பலை அதிக தற்காலிக கழிவறை மற்றும் ஓரளவு தங்குமிட வசதிகளை தன்னைப்போலவே சிறைபட்டிருந்த பிற கப்பல் பணியாளர்களின் உதவியுடன் (MV Safeer) MV சபீர் என்ற தனது சரக்குக் கப்பலில் ஏற்படுத்தினார்.

ஒருவழியாக 1990 செப்டம்பர் 2 ஆம் தேதி தனது கப்பலில் உள்ள 14 உயிர்காப்பு படகுகள் மற்றும் 700 உயிர்காப்பு உடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதலில் கர்ப்பிணி பெண்கள், வீல் சேர்களில் உள்ளவர்கள் என இயலாதோருக்கு தனது கப்பலில் பயணம் செய்ய முன்னுரிமை அளித்தார்.

35 நாட்கள் சிறை மீண்ட பயணம் தொடங்கி 8 மணிநேரம் வரை கடல்கன்னிவெடிகளுக்கு பயந்தவாறு நிசப்தமான பயணம் தொடர்கையில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று வானத்தில் வட்டமிட மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது ஆனால் வந்தவர்கள் பிபிசி தொலைக்காட்சியினர், அவர்கள் மூலம் கேப்டனின் சமயோசிதத்தால் 700 இந்தியர்களும் மீட்கப்பட்ட செயல் செய்தியாய் உலகெங்கும் பரவியது.

ஒருவழியாய், 2 நாள் பயணத்திற்குப் பின் செப்டம்பர் 4 ஆம் நாள் துபாய் அல் ராஷித் துறைமுகத்தை வந்தடைய, உலக வரலாற்றிலேயே முதன்முதலாக துபாயின் கடற்படை கப்பல்களின் ராணுவ வரவேற்பு ஒரு கார்கோ கப்பலுக்கும் அதன் கேப்டனுக்கும் கிடைத்தது.

கப்பலிலிருந்து இறங்கிய 4 மணி நேரத்தில் பலர் இந்தியாவிற்கு விமானம் மூலம் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஒரு கர்ப்பிணிப் பெண் துபாய் மருத்துவமனையில் குழந்தையை ஈன்றெடுத்தார். அவர் பணியாற்றிய கப்பல் நிறுவனமும் மற்றும் பலரும் இந்த நிஜ ஹீரோவை கண்ணியப்படுத்தினர், உலக மீடியாக்கள் கொண்டாடின.

ஆனால், வழமைபோல் இந்திய அரசாங்கம் இன்று வரை கேப்டன் ஜெய்ன் ஆபிதீன் ஜூவாலே அவர்களை இன்று வரை கண்டுகொள்ளவே இல்லை என்றாலும் 700 இந்தியர்களும் தனக்கு நன்றி தெரிவித்து கையெழுத்திட்டு தந்த அந்த நினைவுகளையே மிகப்பெரும் கௌரவமாக கருதி பெருமிதம் கொள்கிறார் இன்று நியூஸிலாந்தில் வாழும் 64 வயது இந்தியர்.

மேலும் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் ஒன்றும் இந்த வரலாற்றுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தன்னை சிறுமைப்படுத்தி படம் எடுத்திருப்பது அவர் உள்ளத்தை காயப்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கடந்த வாரம் துபாயில் பணியாற்றும் தனது மகனை காண வந்திருந்தபோது கல்ஃப் நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் சாராம்சம் இது.

இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த முஸ்லீம்களின் வரலாற்றையே இருட்டடிப்பு செய்யும் இந்தியா உம்முடைய சாகசத்தை மதிக்கும் என நினைப்பது மடத்தனம் கேப்டன் ஜெய்ன் ஆபிதீன் ஜூவாலே, ஏனென்றால் நீயும் ஒரு இந்திய முஸ்லீம்.

Source: Gulf News


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.