மதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 பேர் பரிதாப பலி: படங்கள் இணைப்பு
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் முக்கூட்டுச்சாலை காசிம் நகரில் வசிப்பவர் ரமேஷ். லோடு மேன் பணியாளர். இவரது மகன் மணிகண்டன் ( வயது 5 ) அரசு தொடக்கப்பள்ளி 1 ம் வகுப்பு மாணவன். அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். சமையல் தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீதர் ( வயது 4 ) அரசு பாலகர் பள்ளி மாணவன்.

இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு அருகே நாய்க்குட்டியின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இவற்றை தூக்குவதற்கு இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தரையில் கிடந்த கம்பி அருகே சென்றனர். அப்போது மின் ஒயர் கம்பி  அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இவற்றை கவனிக்காத சிறுவர்கள் கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தனர். உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுவர்கள் உயிர் ஏற்கனவே பிரிந்து இருப்பது தெரியவந்தது.

தகவலரிந்த பட்டுக்கோட்டை வாட்டாட்சியர் குருமூர்த்தி, மதுக்கூர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மதுக்கூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாணக்கியன், கிராம நிர்வாக அலுவலர் மணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சிறுவர்கள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எம். கஃபார் மதுக்கூர் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.ஜே ஆனந்த் ஆகியோர் கூறுகையில்; பள்ளிச்சிறுவர்களின் உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. துயரில் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.