உசேன் போல்ட் தங்கம் வென்றார் தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடியில் கடந்து உசேன் போல்ட் தங்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணிக்கு நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட், யோகன் பிளேக் (ஜமைக்கா), ஜஸ்டின் கேட்லின், புரோ மெல் (அமெரிக்கா) பென் யூசுப்மெட்டி  (ஐவேரி கோஸ்ட்), ஆந்த்ரே டி கிராஸ் (கனடா),  ஜிம்மி விகாட் (பிரான்ஸ்), அகானி சிபின் (தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 பேர் அரைஇறுதி மூலம் தகுதி பெற்று இருந்தனர். இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறே உசேன் போல்ட் வெற்றி பெற்றார்.
அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உசேன் போல்ட்டுக்கு கேட்லின் சவால் கொடுத்தார். போல்ட்டை விட அவரே முன்னிலையில் இருந்தார். இதனால் கேட்லின் வெற்றி பெற்று விடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி 15 மீட்டரில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓட்டத்தில் அனல் பறந்தது. அவர் மிகவும் வேகமாக ஓடி கேட்லினை ஓரம் கட்டினார். அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவை சேர்ந்த ஆந்த்ரே கிராஸ் 9.91 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரர் என்பதை உசேன் போல்ட் நிரூபித்து உள்ளார்.

பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும், லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் 100 மீட்டர்  ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் சாம்பியன் ஆகி இருக்கிறார். இதன் மூலம் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உசேன் போல்ட் நீடிக்கிறார். உசேன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்துக்கு முன்பு யாராலும் தாக்கு பிடிக்க இயலவில்லை. இதில் பிளேக் 4&வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

9.81 வினாடி

100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடியில் கடந்து உசேன் போல்ட்டுக்கு இந்த சீசனில் சிறந்த நிலையாகும. 2009-ம் ஆண்டு அவர் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. ஒலிம்பிக் சாதனையாளராகவும் உசேன் போல்ட்தான் உள்ளார்.

ஒலிம்பிக்கில்7-வது தங்கம்

ஒலம்பிக் போட்டியில் உசேன் போல்ட் 7-வது தங்கப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர்,  4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் தொடர் ஒட்டத்தை வென்று இருந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.