மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும் : உண்மை அறியும் குழு அறிக்கை பதிவு 4
பேருந்து குண்டு வழக்கு: பழைய வாக்குமூலப்படி குண்டு வைத்தது இஸ்மத்; Q பிரிவு விசாரணையின்படி இது ஹாரூன். 3. 2012 இராமர் கோவில் சைக்கிள் குண்டு ல் மாலிக், தௌபீக் ஆகியோர், ஹாரூன். Q பிரிவு விசாரணையில் தவ்பீக் பெயர் மட்டும் உள்ளது. 4. 2013 நவம்பர் சுங்கம் பள்ளிவாசல் அக்பர் அலி கார் குண்டு வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி இதைச் செய்தது ஹாருனுன் அசாருதீனும். Q பிரிவு விசாரணையில் இது மைதீன் பீர் ஆக மாறுகிறது. 5. 2014 சுங்கம் பள்ளிவாசல் காஜா மைதீனின் இரு சக்கர வாகனத்தில் குண்டு வெடித்த வழக்கு: சிவகுமார் விசாரணையின்படி அது உமர் ஃபாரூக்; Q பிரிவு விசாரணையின்படி அது மைதீன் பீர். 6. 2012 ஆகஸ்டில் உமர் ஃபாரூக் கடைக்கு வந்த பார்சல் குண்டு வழக்கு: சம்பவம் நடந்த உடன் பதியப்பட்ட தெற்குவாசல் காவல் நிலையமு.த.அ யின் அடிப்படையில் 96 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி அசாருதீன்தான் என அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்றைய Q பிரிவு விசாரணையின்படி பார்சல் குண்டைக் கொண்டு வந்தது தவ்பீக். விசாரணையில் இப்படி ஏற்படுத்திய அதிரடித் திருத்தங்கள் இத்தோடு முடியவில்லை. அடுத்து மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். திடீரென இந்த வழக்குகள் C.B.C.I.D யின் S.I.D வசம் ஒப்படைக்கப்பட்டது. C.B.C.I.D யின் ADSP மாரிராஜன் கடந்த 24.03.2015 அன்று இதை மறு வழக்காக மீள்பதிவு (Re – Register) செய்தார். அதன்பின் இந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகளாக சீனிவாசன், முருகவேல், மணிவண்ணன், சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டாலும் நடைமுறையில் இந்த வழக்குகள் அனைத்தையும் இப்போது மாரிராஜனே விசாரித்து வருகிறார். நாங்கள் சந்தித்த அனைவரும் இதை உறுதி செய்தனர். இந்தப் புதிய திருப்பங்களின் ஊடாக இவர்கள் உருவாக்கிய ஒரு புதிய வழக்கு அதிர்ச்சியை அளைக்கக் கூடியது. மார்ச் 21, 2015 அன்று மேலூரில் அப்போது கூரியர் ஏஜன்சி ஒன்றை வைத்திருந்த அப்பாஸ்மைதீன் (43) என்பவரை Q பிரிவு போலீசார் பெரும் படையுடன் வந்து இழுத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் அவரைக் கடுமையாக அச்சுறுத்தி இறுதியில் பிரான் மலைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஏராளமான காவல்துறையினர் முன் அவரை நிறுத்தி, அடித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியைக் கை நீட்டிக் காட்டச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீழே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கும் அந்த வாளி குண்டுக்குக் காரணமானவர் அப்பாஸ் மைதீன் தான் எனச் சொல்லப்பட்டது. பின் அவரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமும் பெறப்பட்டது. பின் மீண்டும் மார்ச் 31, 2015 அன்று அவரை ADSP மாரிராஜன் ‘கஸ்டடி’ எடுத்து இன்னொரு வாக்குமூலத்தில் கையொப்பம் வாங்கினார். ஒரே நபர், ஒரே வழக்கு குறித்துத் “தந்துள்ள” இரு வாக்கு மூலங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. Q பிரிவு முன் வைத்துள்ள வாக்குமூலத்தில், “2011 ம் ஆண்டு ஹாரூன் மூலம் ஒரு வெடிகுண்டு வைத்தோம். அது வெடித்தது” என அப்பாஸ் மைதீன் கூறுவதாக உள்ளது. பத்து நாட்களுக்குப் பின் ADSP மாரிராஜன் பதிவு செய்துள்ள வாக்குமூலத்தில், “பேக் கடை செய்யதுவும், ஹாருனும் வெடிகுண்டை மதுக்கடை முன் வைத்து வெடிக்கச் செய்வது எனத் தீர்மானம் செய்யப்பட்டது. உமர்ஃபாரூக் வெடிகுண்டு செய்து தருவதாகக் கூறினார். அப்போது செல்வகனி, தலைவர் சீனி, வக்கீல் பயாஸ், வக்கீல் சௌகத் அலி, ஆட்டோ யாசின் ஆகியோர் தங்களிடம் இருந்த பணம் 5000 த்தை வெடிமருந்துப் பொருள் வாங்குவதற்கு உமர் ஃபாரூக்கிடம் கொடுத்தனர். இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் நாங்கள் செருப்புகடை செய்யது கடைக்கு வந்தோம். அப்போது உமர் ஃபாரூக் கையில் ஒரு பேக் கொண்டு வந்திருந்தார். அதிலிருந்து பேட்டரி, வெடிமருந்து மற்றும் டைமருடன் கூடிய ஒரு டப்பாவை வெளியில் எடுத்தார். பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் அதை எப்படி வெடிக்கச் செய்வது என்று சொல்லிக் கொடுத்தார். பின்னர் வெடிகுண்டை எடுத்து சென்று மதுக்கடை பார் முன்பு வைக்கச்சொல்லி பேக் கடை செய்யதுவிடமும் ஹாருனிடமும் சொல்லிவிட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அன்று இரவு மாட்டுத்தாவணி எதிரே உள்ள மதுக்கடையில் வெடிகுண்டு வெடித்தது” என விரிவாக உள்ளது. நாங்கள் நெல்பேட்டையில் சந்தித்த பலரும் “உன்னை 13 வழக்குகளிலும் சிக்க வைத்து விடுகிறேன்” என மாரிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் மிரட்டி வருவதாகக் கூறினர். யாரை எல்லாம் காவல்துறை குறி வைத்துள்ளதோ அவர்களை எல்லாம் இப்படிக் காவல்துறையாலேயே தயாரிக்கப்பட்ட இந்த அப்பாஸ் மைதீனின் வாக்குமூலத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நாங்கள் சந்தித்தவர்கள் சொன்னவை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.