துபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ சேவையில் தடங்கள் துபையில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து நேரமான நேற்று மாலை 5.55 மணிமுதல் 7 மணிவரை மெட்ரோ சேவையில் தடங்கள் ஏற்பட்டன. மேலும் இந்த ரெட் லைன் எனும் மெட்ரோ ரயில் தடம் கிரீன் லைன் தடத்தை விட
அதிக பயணிகளால் பயன்படுத்தபடுவது என்பதும் குறிப்பிடத்தக்கது

 துபையின் வேல்டு டிரேட் சென்டர் மற்றும் பைனான்ஷியல் சென்டர் இடையேயும், அல்நூர் பேங்க் மற்றும் எப்ஜிபி பேங்க் இடையேயும் மெட்ரோ ரயில்கள் பாதி வழியில் நிற்க பயணிகள் 40 நிமிடங்களுக்கு மேல் மெட்ரோ ரயில்களுக்குள் காத்திருக்க நேரிட்டது. மேலும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

மெட்ரோ ரயில்களுள் இருந்த பயணிகளுக்கும் மெட்ரோ நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கும் முறையான அறிவிப்புகள் செய்யப்பட்டு வந்ததுடன் துரித நடவடிக்கையின் மூலம் தொழிற்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் மாலை 7 மணியளவில் மீண்டும் மெட்ரோ சேவை இயங்கத் துவங்கியது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.