திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அல்லாடும் 4.12 கோடி இந்திய குடிமகன்கள்!: திடுக் ரிப்போர்ட்
திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அல்லாடும் 4.12 கோடி இந்திய குடிமகன்கள்!: திடுக் ரிப்போர்ட்
டெல்லி: நம் நாட்டில் 4.12 கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சிங்கிளாக வாழ்கிறார்கள். உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர். இதனால் திருமணம் செய்து கொள்ள பெண் இல்லாமல் 4.12 கோடி பேர் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த தகவல் அண்மையில் வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்கள்!
நாட்டில் 5.63 கோடி ஆண்கள் 20களில் உள்ளனர். ஆனால் அந்த வயது வரம்பில் 2.07 கோடி பெண்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சுமார் 3.55 கோடி பெண்கள் குறைவாக உள்ளனர்.


30கள்!
நம் நாட்டில் 70.1 லட்சம் திருமணமாகாத ஆண்கள் 30களில் உள்ளனர். ஆனால் அதே வயது வரம்பில் 22.1 லட்சம் பெண்களே உள்ளனர். இதனால் 47.91 லட்சம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் இல்லை.

40கள்!
20, 30கள் மட்டும் அல்ல 40களில் உள்ள ஆண்களுக்கும் திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது இல்லை. நம் நாட்டில் 16.92 லட்சம் ஆண்கள் 40களில் உள்ளனர். அதே 40களில் 8.67 லட்சம் பெண்களே உள்ளனர்.

மணப்பெண் !
நாட்டில் உள்ள 6.50 கோடி திருமணமாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5ல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

பெண் சிசு கொலை!
1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.