49,000 சவூதி வாழ் ஹஜ் யாத்ரீகர்களுக்கு குறைந்த செலவில் ஹஜ் ஏற்பாடு !இந்த வருட ஹஜ் கடமையை சவூதி நாட்டவர்களும், சவூதியில் வாழும் வெளிநாட்டினருமாக சுமார் 49,000 பேர் மிகக்குறைந்த செலவில் சவூதி அரசின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள 76 நிறுவனங்கள் மூலம் அனுமதிக்கப்படுவர்.

மின்னணு (Online) வழியாக விண்ணப்பங்களை 24 மணிநேரமும் இயங்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம், மேலும் இதுகுறித்த புகார் பதிவு செய்வதாக இருந்தால் ஹஜ் அமைச்சகத்தின் தொடர்பு மையங்களில் (Haj Ministry's Communication Centers) பதிவு செய்யலாம்.

மேலும், மினா கூடாரங்களில் புதிதாக 8500 ஏர் கூலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது கடந்த வருடம் செயல்பாட்டிலிருந்த ஏர் கூலர்களை விட ஆற்றல் நிறைந்தது. சென்ற வருடம் கூடாரங்களில் நிலவிய 33 டிகிரி சூட்டை விட 21 டிகிரி சூட்டையே கூடாரங்களில் நிலவச் செய்யும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.