சவூதியில் 6 மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் தமிழர்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவந்த தமிழர்கள் உள்பட 25 இந்தியர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் ஊர் திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகின்றனர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தங்களை இந்தியா திரும்ப அந்த நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊதியமும் வழங்கப்படாததால் உணவிற்கு வழியின்றி தவிப்பதாக அந்தத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தங்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.