இந்தியாவின் 70 வது சுதந்திர தினம்
இந்தியாவின் 70 வது சுதந்திர தினம்
முகலாயர்களால் வரையறுக்கப்பட்ட இந்துஸ்தானுக்கு முன்பாக பல மாகானாங்களாக பிரிந்திருந்த மக்களிடத்தில் ஆதிக்க ஆரியத்தின் மூலம் அடிமையாக வாழ்ந்த மக்களை அடிமைதனத்திலிருந்து மீட்டெடுக்க முதன் முதலில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் முஸ்லீம்கள். பிறகு பல்வேறு சூழ்ச்சிகளால் ஆங்கிலேயர்கள் நாட்டை கைப்பற்றி ஆளும் தருனத்தில் நாட்டை மீட்டெடுக்க சுதந்திர போராட்ட தீயை பற்ற வைத்ததும் முஸ்லீம்கள். 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை எதிர்த்து 1857 க...்கு முன்பிலிருந்தே போராடிய திப்பு சுல்தான், ஹைதர் அலி, கான் சாகிப், ஹஜரத் மஹள், சிராஜுத் தவ்லா போன்றவர்க்ளின் வீர போராட்ட வரலாறை திட்டமிட்டு மறைத்தனர் கடந்த கால ஆட்சியாளர்கள். 1857 ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் அதற்கு பிறகு நடந்த பல போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சுபாஸ் சந்திர போஸின் படை தளபதி ஷானவாஸ், பங்கெடுத்த பல ஆயிரக்கனாக்கான வீரர்களின் தியாகங்கள், பக்கீர் , ஹபீப் போன்ற நன்கொடை வழங்கியவர்கள், தூக்கு மேடையை முத்தமிட்டவர்கள் என எல்லா ஆதாரங்களையும் வரலாறுகளையும் இன்றைய அரசாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டும், மறைக்கபட்டும் வருகிறது. கல்வி, மற்றும் வராலாறு பாடத்திட்டங்கள் காவி மயாமாகி இது மாதிரியான முஸ்லீம்களின் வரலாற்றை மாற்ற சதி திட்டம் தீட்டி அதை நிறைவேற்றும் பணிகளையும் கனகச்சிதமாக செய்துகொண்டும் வருகிறார்கள். இந்தியாவின் எதிர்கால தலைமுறையினருக்கு முஸ்லீம்கள் வந்தேரிகளாகவும், சுதந்திர போராட்டதிற்கும் முஸ்லீம்களுக்கும் எள்ளளவும் பங்கு இல்லை என்று சித்திரிப்பதே ஃபாஸிச சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களின் திட்டம். அதேபோல் முஸ்லீம்களுக்கு தேசபக்தி கிடையாது என்ற பொய்யான பிம்பம் இவர்களால் உருவாக்கப்பட்டு பிரச்சாரமும் மேற்கொள்ளபடுகிறது. இம்மாதிரியான சதிதிட்டத்தை உடைத்தெரியவே கடந்தகாலங்களில் சுதந்திர வேட்கையை மக்கள் மனதில் நிலை நிறுத்த சுதந்திர அணிவகுப்பு, போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து கௌரவிப்பது போன்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் உரிமை எடுத்து எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயதது பாப்புலர் ஃப்ரண்ட். இதனை ஆட்சியாளர்கள் தடுக்க பல முட்டுகட்டைகள் போட முற்பட்டது போலவே முஸ்லீம்களிலும் சிலர் களமிரங்கினர் என்பது தான் வேதனை. இன்றும் சிலர் நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் விதமாக இருக்கும் சுதந்திர தினத்தை நமக்கு இழைப்படும் அநீதிகளால் கருப்பு தினம் என்றும் ஷிர்க், ஹராம் என்றும் அதிமேதாவிதனமாக கூறுவது வேதனையிலும் வேதனை. நமக்கான உரிமை மற்றும் நீதிக்கான போராட்டங்களும் ஒரு புறம் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்க மறு புறம் இது மாதிரியான நினைவு கூறலை நடத்துவது மிக அவசியம். இது போன்றவர்களின் கருத்தை புறந்தள்ளிவிட்டு ஃபாஸிசத்தின் கோர பிடியில் இருக்கும் இந்தியாவை காப்பாற்ற அனைவருக்கும் சம நீதி, சம உரிமை, பாதுகாப்பு என புதிய இந்தியாவை உருவாக்க சபதமெடுத்து முன் வாருங்கள். ஒன்றினைவோம் சக்திபெறுவோம். ஜெய்ஹிந்த்( ஒற்றுமையே வெற்றி).
வரும் காலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடுவோம் நினைவு கூறுவோம் நம் முன்னோர்கள பெற்ற சுதந்திர தினத்தை.
நன்றி
இவன்
ஷார்ஜா அப்துல் ரஹ்மான்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.