தாயின் கடனை அடைக்க முன்வந்த 8 வயது சிறுவன் !கடந்த சனிக்கிழமை அன்று பீஹார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் நடந்த 'லோக் அதாலத்' என்ற மக்கள் பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பரிதாப கோலத்தில் 8 வயது சிறுவன் தன் தாயின் கடனை அடைக்க முன்வந்தது அதிகாரிகளை அதிரச் செய்தது.

சுமார் 10 வருடங்களுக்கு முன், சோம்பேறி கணவனால் வருமானமின்றி தவித்த அனிதா தேவி என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சொந்தமாக சிறுதொழில் செய்திட வங்கி ஒன்றில் 21,000 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் அனிதா தேவி இறந்துவிட கணவனும் பொறுப்பாக ஒடிவிட அனாதையான அனிதா தேவியின் தற்போதைய 8 வயது மகன் உறவினர்களின் தயவில் வளர்ந்து வருகிறான்.

தாய் பட்ட கடனை அடைக்கச் சொல்லி 8 வயது சிறுவனுக்கு வங்கி ஓலை அனுப்ப, கிராமத்தினரின் மனிதாபிமான உதவியால் சுமார் 5000 ரூபாய் சேர்த்த 8 வயது சிறுவன் சுதீர் குமார் 'லோக் அதாலத்' நடைபெறும் இடத்தில் முதற்கட்ட தவணையை செலுத்தச் சென்றான்.

விஷயத்தை அறிந்த, மாவட்ட நீதிபதியும் லோக் அதாலத் தலைவருமான கங்கோத்ரி ராம் திரிபாதி அவர்கள் 8 வயது சிறுவனுடைய பொறுப்புணர்வை வியந்து பாராட்டியதுடன் முழுக்கடனை வங்கியுடன் பேசி தள்ளுபடி செய்ததுடன் அதற்கான ஒப்புதல் ரசீதையும் பெற்றுக் கொடுத்தார்.

தாய் பட்ட கடனை தான் செலுத்திவிட வேண்டும் என நினைத்த அனாதை சிறுவனின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை அவனது கிராமத்தினர் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.