திருச்சியில் கோர விபத்து! 9 பேர் மரணம்! படங்கள் இணைப்புதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் வெள்ளிக்கிழணை காலை நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, தனக்கு முன்னால் ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது
மோதியது.

இதில் சரக்கு வாகனம் நொறுங்கி, சாலையோரமாக உருண்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் 9 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது.
சரக்கு வாகனத்தில் வந்தவர்கள், திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மணற்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திருச்சிக்கு கோயில் வழிபாட்டிற்காகச் சென்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பேருந்தின் ஓட்டுனர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.