90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புகள் சவூதியில் கண்டுபிடிப்பு !மண்ணுக்குள் புதைந்துள்ள பண்டைய காலங்களில் ஓடிய ஆறுகளின் தடங்களை மீட்டெடுக்கும் 'பசுமை அரேபியா' எனும் அகழ்வாரய்வு பணிக்காக 2012 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சவூதி மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களின் கூட்டு ஆராய்ச்சியாளர்கள்; குழு, சவூதி அரேபியாவின் 'தைமா' நகரம் அருகேயுள்ள அல் நபூத் பாலைவனப் பிரதேசத்தில் சுமார் 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித விரல் எலும்புகளை கண்டறிந்துள்ளனர்.

மனித இனம் படைக்கப்பட்டு சுமார் 500,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புகளிலேயே இது தான் மிகவும் பழமையானது என கணிக்கப்படுகின்றது.

அல் நபூத் பாலைவனத்தின் 'டாஸ் அல் குதாத்' பகுதியில் சுமார் 325,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.

Source: Gulf News / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.