ராம்தேவின் மாட்டு மூத்திர பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.90 லட்சம் அபராதம்பாப ராம்தேவின்  பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் பல பொருட்கள் மாநில உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை என்று உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. ஹரித்வாரில் உள்ள  பதஞ்சலி உற்பத்தி ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறை நடத்திய சோதனையில் பல பொருட்களின் மாதிரிகளை ஆய்வுகூட சோதனைக்காக எடுத்துச் சென்றது.
இந்த சோதனைக்கு பிறகு  பதஞ்சலி ஆயுர்வேதாவின் பல பொருட்கள் வேறு இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு  பதஞ்சலி பெயர் பொறிக்கப்படுகிறது என்றும்  பதஞ்சலி இப்பொருட்களை சந்தைப்படுத்தும் வேலைகளை மட்டுமே செய்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் உப்பு குஜராத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் கடுகு எண்ணெய் ராஜஸ்தானில் தயாரிக்கபப்ட்டது என்றும் ஆனால் இவ்விரண்டும் பதஞ்சலி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது என்று கூறி விற்பனை செய்யப்படுகிறது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி யோகேந்திர பாண்டே கூறியுள்ளார்.
ஏறத்தாழ ஆறு பொருட்கள் இது மாதிரி விற்பனை செய்யப்படுகிறது என்றும் இதற்காக ராம்தேவின் நிறுவனத்திற்கு ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ராம்தேவ், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்றும் இத்தகைய அளவுகோல்களைக் கொண்டு இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களும் அளவிடப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.