ஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911சவூதி உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேசிய மைய அறிவுறுத்தலின்படி, அவசரகால உதவி தேவைப்படுவோர் குறிப்பாக புனித மக்கா நகரில் உள்ளவர்கள் 911 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும், இது குறித்த விழிப்புணர்வு குறுஞ்செய்திகளையும் அரபியிலும் ஆங்கிலத்திலும் அனைவருக்கும் அனுப்பியும் வருகின்றது.

இந்த பாதுகாப்புத் திட்டத்தில் சவூதி செம்பிறைச் சங்கம், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பல்வேறு அரசு செயலகங்கள் கை கோர்த்துள்ளன.

பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல்கள், சாலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உயர் தொழிற்நுட்ப கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ஹரம் ஷரீஃப் கண்காணிப்பு கேமிரா வளையத்தையும் இணைத்து பல்வேறு அவசரகால உதவித் திட்டங்கள் ஹஜ் யாத்ரீகர்களின் நலம் பேணலுக்காக தயார் நிலையில் உள்ளன.

Source: Arab News


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.