பா.ஜ.க உறுப்பினராக்கும் போலி Airtel Customer Care எண்கள் : பகீர் தகவல்!!!
Airtel customer care எண்களாக இணையத்தில் காணக்கிடைப்பவைகளில் சில உங்களை பாஜக உறுப்பினராக்கக் கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

2014ல் பாஜக தனது தீவிர உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது. விளைவு, உலகில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற சிறப்பை பெறும் வகையில் அதிக உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்ததாக பாஜக அறிவித்தது.  தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளேயான பாஜக, 80 ஆண்டுகள் செயல்பாட்டிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட 1.3 மில்லியன் வாக்காளர்களை அதிகம் சேர்த்து அதிர்ச்சி அளித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் உலகின் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 35 மில்லியன் உறுப்பினர்களை கொண்டதாக கருதப்பட்ட பாஜக, இணையம் மற்றும் Missed Call மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட திட்டங்களை ஆரம்பித்ததன் மூலம்,  அடுத்த 5 மாதங்களில் 50 மில்லியன் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்ததாக அறிவித்தது.

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்ததை அடுத்து பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் எழுந்தது. அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதனை விமர்சித்தனர். பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தில்லுமுல்லு செய்தே உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், The Wire இணையதள செய்தி நிறுவனம், புலனாய்வு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் Airtel  customer care எண்களாக காணப்படுபவைகளில் சிலவற்றை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.