கத்தார் நாட்டில் பலியான தொழிலாளி : உடலை கொண்டு வர கோரிக்கை!
கத்தார் நாட்டில் விபத்தில் பலியான, கடலூரை சேர்ந்த தொழிலாளியின் உடலை உடனடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு கத்தார் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இவர் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி பணி முடிந்து திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.

இந்நிலையில் ராஜாவின் மரணம் குறித்து, அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவித்த தனியார் நிறுவனம் உடலை அனுப்ப 40 நாட்கள் ஆகும் என கூறியது. இந்நிலையில் ராஜாவின் உடலை உடனடியாக கொண்டு வர கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.