முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மாநாடு விளக்க கூட்டம். பல தீர்மானங்கல் எடுக்கப்பட்டதுஆகஸ்ட் 21-ந்தேதி திருவாரூரில் நடைபெற உள்ள முஹம்மதுர் ரஸ்லுல்லாஹ் மாவட்ட மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட வாகனத்தில் சென்று பங்கேற்ப்பது!

முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மாநாடு விளக்க கூட்டதில் தீர்மானம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மாநாடு விளக்க கூட்டம் கொய்யா மகாலில் நடைப்பெற்றது. கிளைத்தலைவர் முகமது மீராலெப்பை தலைமை வகித்தார். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் புஹாரி சரிப் ஓதுவோரால் புறக்கணிக்கப்பட்ட புஹாரி ஹதீஸ்கள் என்ற தலைப்பில் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி பேசினார். பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் ஆயிஷா ஆலிமா பேசினார். கூட்டத்தில் மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் குஜராத் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கும் இந்த காட்டுமிராண்டி செயலுக்கும் கண்டனம், ஆகஸ்ட் 21-ந்தேதி திருவாரூரில் நடைபெற உள்ள முஹம்மதுர் ரஸ்லுல்லாஹ் மாவட்ட மாநாட்டில் முத்துப்பேட்டை கிளையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனத்தில் சென்று பங்கேற்ப்பது என்றும், மாநபி வழிக்காட்டுதளுக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கு எதிராகவும் உள்ள செயலை முஸ்லிம்கள் புறக்கணித்து நபி வழியில் தங்களது வழிப்பாட்டை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், முத்துப்பேட்டையில் எவ்வித அறிவிப்பும் இன்றி எந்தநேரம் என்றில்லாமல் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டு வருகின்றது இதை முத்துப்பேட்டை மின்சார வாரியம் வானத்திற்கு எடுத்துக்கொண்டு சரிசெய்ய வேண்டும், முத்துப்பேட்டையில் குடிநீர் தேவையான அளவு வழங்கப்படாமலும் இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒருமுறை பேரூராட்சி நிர்வாகம் வழங்கப்படுவதால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் அவதிப்படுகின்றனர் இதனை பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்யவேண்டும், முத்துப்பேட்டை பங்களா வாசல் முதல் பேட்டை வரை உள்ள சிமிண்ட் சாலை குண்டும் குழியுமாக உள்ளது இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் இவ்வாறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கிளை-2 தலைவர் முகமது அலி ஜின்னா, கிளை செயலாளர் புகாரி, துணைத்தலைவர்கள் முகமது யூசுப், சாகுல் ஹமீது வெளிநாடு வாழ் நிர்வாகிகள் புரைதா பரக்கத் அலி, குவைத் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி பிர்தொவ்ஸ் கான், கிளை நிர்வாகிகள் சுபைகான் மற்றும் நஜிபுதீன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.