அதிரை சேர்மன் அஸ்லம் கைது! - படங்கள் இணைப்புகர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால், தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதற்கு அனைத்து கட்சிகளிடமும் விவசாய சங்கங்கள் ஆதரவு கேட்டன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதன்படி நேன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.அந்த வகையில் பட்டுக்கோட்டையில் அதிரை சேர்மன் அஸ்லம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் போலிசாரால் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.