சவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள் கைது !சவூதியில் கார் சறுக்கல் (Drifting) விளையாட்டுகளில் ஈடுபடுவது சமீபத்தில் தடை செய்யப்பட்டது என்றாலும் 'தமிழகத்தில் சொல்வது போல் ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா?' மீறி விளையாடிய சவூதி இளைஞர்களும், வேறு சில அரபு நாட்டவர்களும், பாகிஸ்தானியர் சிலரும் ரியாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவூதியின் புதிய சட்டப்படி, கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு பிடிபட்டால், முதல் முறை 10,000 ரியால் அபராதம் மற்றும் கார் ஒரு மாதத்திற்கு போலீஸாரால் முடக்கப்படும். இரண்டாம் முறையாக ஈடுபட்டால் ஒரு வருடம் சிறையுடன் 10,000 ரியால் அபராதம் மற்றும் கார் 3 மாதங்களுக்கு முடக்கப்படும்.

மூன்றாம் முறையாக பிடிபடுவோர் 40,000 ரியால் அபராதம் செலுத்துவதுடன் அவரது காரும் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முடக்கப்படும். கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடும் போது 'சும்மா கூட இருந்தாலும்' இருந்தவர்கள் தண்டம் கட்ட வேண்டும்.

Source: Arab News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.