காஷ்மீர் மக்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா, மத்திய அரசிற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்ஜம்மு கஷ்மீர் உயர் நீதிமன்றம் காஷ்மீர் விவாகரம் குறித்து மத்திய அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ”காஷ்மீர் மக்களை வேற்று கிரகவாசிகளாக நடத்தாதிர்கள் அவர்களையும் உங்கள் நாட்டு சொந்த மக்களாக பாருங்கள், அவர்கள் மீது ஏன் புல்லட் குண்டுகளை வீசுகின்றீாகள்” என காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி Paul Vasanthakumar மற்றும் Muzaffar Hussain ஆகியோர் அடங்கிய பென்ச் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பி கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள பாஜக அரசு, ”காஷ்மீர் கலவரத்தை கட்டுப்படுத்த திறமையான CRPF வீரர்களையே நாங்கள் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளது.
இதை கேட்ட நீதிபதிகள், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால் பிறகு ஏன் மக்கள் இப்படி காயப்பட்டுள்ளாா்கள் முகத்திலும் கண்களிலும் ஏன் இப்படி அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது? நீங்கள் (மத்திய அரசை பார்த்து) எதையும் எங்களிடம் மூடி மறைக்க முடியாது பெல்லட் குண்டுகளால் பாதிக்ப்பட்டவர்களின் ஆதாரம் எங்களிடம் உள்ளது என” நீங்கள் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளனர்.
நீதிபதி வசந்த குமார்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மருத்துவர்களுககு உரிய ஒத்துழைப்பு அளிக்கப்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரித்த நீதிபதிகள், இது மாநிலத்தின் பிரச்சனை , அதற்காக நீங்கள் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துகின்றீர்கள் , காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள் என்ன இது ? என Advocate General, Jahangir Iqbal Ganai ஐ பார்த்து நீதிபதிகள் கேள்வி கேட்ட அவரால் பதில் சொல்ல முடியாமல் போனது.
இந்த செய்தியை ஊடகங்கள் வெளியிடாதது மிகவும் வருத்தமளிக்கின்றது. ஊடகங்கள் எப்பொழு தான் நடுநிலையை கையாளும் ?

Source : http://www.greaterkashmir.com/…/-kashmiris-not-…/224499.html
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.