ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் - ராகுல்காந்திஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மீதான நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசியதாக அவர் மீது பிவண்டி கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை போலீசார் விசாரிக்கும்படி பிவண்டி கோர்ட்டு உத்தரவிட்டதுடன், ராகுல் காந்தி நேரில் ஆஜராகும்படி கூறியது.

இதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜரானார். அவர் தன் வாதத்தில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என ராகுல் காந்தி ஒருபோதும் பேசவில்லை, அந்த அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தான் இதில் தொடர்பு இருந்தது என பேசினார் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன் ஆகியோர் ராகுல் காந்தி கூறியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் ராகுல் காந்தியின் பதிலை ஏற்று வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை முடித்து கொள்ள விரும்புகிறார்களா? என கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை 1–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இந்த நிலையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என குற்றம்சாட்டி பேசியது தவறு என்று ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது

அதனை தொடர்ந்து ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியதாவது:

ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்பு மற்றும் பிரித்தாளும் நடவடிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தை நிறுத்த போவதில்லை. நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.