சவுதி அரேபியாவின் மனிதநேயம் சொந்த செலவில் இந்தியர்களை திருப்பி அனுப்பிகிறதுஇந்தியாவிற்கான வெளியுறவுத்துறை வெற்றியாக, வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்கள் நூற்றுக் கணக்காணவர்களுக்கு ’எக்ஸிட்’ விசா வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்து உள்ள சவுதி அரேபியா, தனது சொந்த செலவிலே அவர்களை திருப்பி தாய்நாட்டிற்கு அனுப்பஉள்ளது.

மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தாமாகவே வெளியிட்டு உள்ள அறிக்கையில், ”முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு வசதிகளை வழங்குவதற்கு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டு உள்ளது.”  முகாம்களில் தங்கியிருப்பவர்கள் பிற நிறுவனங்களில் மீண்டும் வேலையை நாட அனுமதிப்பதாகவும் சவுதி அரேபியா அறிவித்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். சவுதி அரேபியா சென்று உள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே. சிங், இந்திய தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை முறைப்படுத்திய பின்னர் இந்தியா திரும்புவார், என்றும் சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார்.

”சவுதி அரேபியா ஆட்சியாளர் இந்திய தொழிலாளர்களின் அவநிலையை கருத்தில் எடுத்துக் கொண்டார் என்பதை தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்... சவுதி மன்னர் இவ்விவகாரத்தில் உள்ள நடைமுறைகளை இரண்டு நாட்களில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ’எக்ஸிட்’ விசா வழங்க இந்தியா விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டது. இந்திய தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதியையும் செய்துக் கொடுப்பதாக தெரிவித்து உள்ளது. இந்திய அரசு இவ்விவகாரத்தில் ஒரு பைசாகூட செலவுசெய்ய வேண்டியதில்லை என்று சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார்.

வேலையிழந்து தவிக்கும் இந்திய தொழிலாளர்கள் பிற நிறுவனங்களில் வேலையை தேடிக்கொள்ளவும் சவுதி அனுமதி வழங்கிஉள்ளது. தாயகம் திரும்புவதற்கு முன்னதாக இந்திய தொழிலாளர்கள் சவுதி அரேபியா தொழிலாளர் அலுவலகத்தில், தங்களுக்கு வழங்கப்படாத சம்பவம் மற்றும் பிறதொகை விபரத்தை பதிவுசெய்ய வேண்டும். இந்திய தொழிலாளர்கள் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பணத்தினை திரும்பபெற ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து சவுதி தொழிலாளர்கள் அலுவகத்துடன் தொடர்பில் இருக்கும் என்றும் சுஷ்மா குறிப்பிட்டு உள்ளார்.

சவுதி மன்னருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுஷ்மா சுவராஜ், சவுதி அரேபியா பயணத்தின் போது பிரதமர் மோடி தொடங்கிய தனிப்பட்ட மற்றும் இராஜதந்திர உறவினால் மட்டுமே இது சாத்தியமானது என்று கூறிஉள்ளார். இந்தியா மற்றும் சவுதி அரேபியா இப்பிரச்சனையில் தீர்வை எட்டிஉள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபிஆசாத் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.