பீகாரில் பாரதீய ஜனதா தலைவர் சுட்டுக் கொலை, முழு அடைப்பிற்கு அழைப்பு
பாட்னா: பீகார் மாநிலம் தானாபூரில் மர்ம நபர்களால் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அசோக் ஜெய்ஸ்வால் சுட்டுக் கொல்லப்பட்டார். கோலா சாலை பகுதியில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 குண்டுகள் பாய்ந்து அசோக் ஜெய்ஸ்வால் உயிரிழந்தார் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக இருவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மத்திய மந்திரி ராம்கிரிபால் யாதவ் உயிரிழந்த அசோக் ஜெய்ஸ்வால் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாநிலத்தில் சட்டம் ஒழுக்கு சீர்குலைந்து காணப்படுவதன் விளைவே இந்த கொலை என்று ராம்கிரிபால் யாதவ் கூறிஉள்ளார்.

கொலைக்கு எதிராக போராட தானாபூரில் பாரதீய ஜனதா கட்சி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்து உள்ளது. நேற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.