நாட்டை உலுக்கிய "வேகன்'' மாப்ளா முஸ்லிம் படுகொலை எத்தனை பேருக்கு தெரியும்ஜாலியன் வாலாபாக்கை படித்திருக்கிற நாம் அதே போன்ற கொடுமை 1921 ல் சுதந்திரத்திற்கு போராடிய மாப்ளா முஸ்லிம் போராளிகளுக்கு ஆங்கிலேய அரசால் நடத்தப்பட்டதை அதிகளவில் அறியாமலே இருக்கிறோம். அதில் ஒன்று தான் "1921 நவம்பர் வேகன் படுகொலைகள்".
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாப்ளா போராளிகளில் 100 போராளிகளை கைது செய்து அவர்களை காற்று புக முடியாத சரக்கு ரயிலின் ஒரு பெட்டியில் (வேகன்) அடைத்து வைத்தனர் ஆங்கிலேயர்கள். அந்த ரயில் திரூர் ரயில் நிலையத்தில் இருந்து 1921 ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் தேதி கோவையை நோக்கி புறப்பட்டது. சுவாசிக்க காற்று இல்லாமல் பெட்டியில் அடைக்கப்பட்ட 100 போராளிகளில் 70 போராளிகள் தம் உயிரை இழந்தனர்.
ஆங்கில ஏகாதிபத்தியம் நடத்திய இந்த கோர படுகொலைகள் அன்றைக்கு பல தேசிய நாளிதழ்களில் வெளி வந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தேச அளவில் பொது மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தின.
கேரளாவின் வரலாற்று அறிஞர் Dr. கங்காதரன் அவர்கள் குறிப்பிடும் போது, கோவையின் போத்தனூரில் ஆயுத சிறப்பு சட்டம் அமலில் இல்லாத காரணத்தால் "வேகன் படுகொலைகள்" வெளியே தெரிய வந்தது. மலபாரின் ஒரு பகுதியில் அந்த வேகன் திறக்கப்பட்டிருந்தால், அந்த படுகொலைகள் ஆங்கிலேய அரசால் மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

1921 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ல் 215 மாப்ளா முஸ்லிம் இளம் போராளிகள் அவர்களுடைய குடும்பத்தினர்கள் முன்னிலையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் மலபாரில் ஆயுத சட்டம் அமலில் இருந்ததால் இதை நாளிதழ்கள் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கூடுதல் தகவலையும் வரலாற்று குறிப்பாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த தேச விடுதலைக்காக தம்முடைய உயிர், உடைமை, தம் வீட்டு பெண்களின் கற்பு (ஆம் ஆங்கிலேய படை பல மாப்ளா முஸ்லிம் பெண்களின் கற்பை சூறையாடியது.) என்று அனைத்தையும் இழந்த போராளிகளின் ஒரே இலக்கு "இந்திய விடுதலை" மட்டுமே. இந்திய விடுதலைக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த இவர்களை போன்ற சாமானியர்களையும் நாம் நினைவில் கொள்வோம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.